இருட்டுல
திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா
அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. கடவுள்
மேல அவ்வளவு நம்பிக்கை..
****************************************
படிச்ச
நாம தான் அறிவாளினு மட்டும்
நினைக்கூடாது.
நமக்கெல்லாம்
ஒளியை தந்த தாமஸ் ஆல்வா
எடிசன் பள்ளிக்கு சென்றது வெறும் மூன்று
மாதங்கள் தான்..
********************************************
பத்து பேர் வேலைய ஒருத்தரே
செஞ்சா அது தனியார் வேலை………
பத்து பேர் சேர்ந்து
செஞ்சும் ஒரு வேலையும் நடக்கலைன்னா
அது கவர்மென்ட் வேலை...
****************************************
ஒவ்வொரு
ஆணின் வெற்றிக்கு பின்னாடியும்,
நேரத்துக்கு
தூங்குற ஒரு கேர்ள் பிரண்ட்
இருப்பா...
************************************
கம்யுனிசம்ன
என்ன ??
உனக்குனு
ஒரு பிகர் செட் ஆனதுக்கு
அப்புறம்……..
#கம்யுனிசம்...
*****************************
மனுசனுக்கு
வாழ்க்கைல ரெண்டே பிரச்சனைதான்
இருப்பவனுக்கு
#சொத்து பிரச்சனை
இல்லாதவனுக்கு
#சோத்து பிரச்சனை
******************************
"A Love" இது
தமிழ்ல எழுதுனா... "எழவு"னு வருது…….
உண்மைய சொல்ற "தமிழ்
வாழ்க"..
**********************************
சிலரை ஏன் சந்தித்தோம் என்றும்
சிலரை ஏன் இவ்வளவு தாமதமாய்
சந்திக்க நேர்ந்தது
என்றும்
தோன்றுவதே வாழ்க்கை..
*************************************
ஒருவரை"கெட்டவன்"என்று
அவர்களே
தீர்மானித்துவிடுகிறார்கள்
"நல்லவன்"என்பதற்க்கு மட்டும்
அடுத்தடுத்து
ஆதாரம் கேட்கிறார்கள்.!
**********************************
எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.அதை தெரிந்து கொண்ட பெண்கள்
மளிகைகடைக்கு
அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
************************************
"அவன்
எனக்கு நல்ல நண்பன்" என்பதைவிட..
"அவனுக்கு நான் நல்ல நண்பன்"
என்பது தான் நட்பின் சிறப்பு.
**************************************
அவரவர்
கடவுளுக்கு கோயில்கட்டிய காலம்போய்……
அவரவர் கடவுளுக்கு சேனல்கள்
ஆரம்பித்துவிட்டார்கள்...
***********************************
அப்துல்கலாம்
கடைசிவரை இந்தியாவிற்கே உழைத்தார்னு சொன்னவுங்க..
இன்னைக்கு
அமெரிக்கா கம்பனிக்கு உழைக்க போன
சுந்தர்
பிச்சைய பெருமையா பேசுது.
#இவங்கள_புரிஞ்சுக்கவே_முடில..
************************************
தடுக்கி
விழுந்திட்டா ஓடிபோய் தூக்கிவிட்டது தாத்தா
தலைமுறை……
கண்டுக்காம
போனது அப்பா தலைமுறை………
நின்று
போட்டோ எடுத்து கொண்டு இருப்பது
நம் தலைமுறை.
#தலைமுறைகள்
*********************************
இங்கு,
மீசையில்லா
பாரதியும் உண்டு!
மீசையுள்ள
அன்னை தெரசாவும் உண்டு!
புரட்சி
ஆண்களால் மட்டுமே
செய்ய முடிந்ததும் அல்ல !!
அன்பு பெண்களால் மட்டுமே
தர முடிந்ததும் அல்ல !!
ஆணுக்குள்ளும்
மென்மை உண்டு!
பெண்ணுக்குள்ளும்
வீரம் உண்டு!!.
****************************************
சரித்திரத்த
திருப்பி பாத்தா,
அது எனக்கு கத்துகுடுத்தது ஒண்ணே
ஒண்ணுதான்.
நாம வாழனும்னா நேரா நேரத்துக்கு சாப்புடனும்.
***************************************
முத்தம்
கேட்டால் கூட சிறிதும் யோசிக்காமல்
கொடுத்துவிடுகிறார்கள்,
கொஞ்சம்
முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்தப்பின் தருகிறார்கள்
#குழந்தைகள்
0 comments:
Post a Comment