தாங்க முடியாத பல் வலியா? இதோ தீர்வு.

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.

கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.

சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.
பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.

அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும்.

செம்பருத்திப்பூ:இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.

ந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்.

உடற் சூடு அகல:கொத்து மல்லி விதைக் கஷாயத்தில் செந்துளசி சாற்றை சேர்த்து உட்கொண்டு வந்தால் அதிகரித்த உடற்சூடு சமநிலை அடையும்.

எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.

ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும்.

கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும்.

கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து பல் துலக்க பயன்படுத்தினால் பல் வலிகள் தீரும்.

சித்தரத்தை, காவிக்கல், படிகாரம், ஆலம்பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து, அதில் பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்

நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Share on Google Plus

About Unknown

Myself Suresh Babu S, working as Placement Executive. I am interested in Technology oriented updates. This is my second blog. You can see my first blog @ http://www.enter4source.in
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment