பிள்ளையார் பிடிப்பதால் வரும் பலன்கள்

1:மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
2:குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
3:புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்.
4:வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
5:உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
6:வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7:விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
8:சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9:சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.
10:வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
11:வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
12:சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோய்யின் வீரியம் குறையும்.
இறைவழிபாடே இல்லறத்தை நல்லறமாக்கும் அருமருந்து.

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர்.
அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும்வருமாறு:
1.முல்லை இலை பலன்அறம் வளரும்
2.கரிசலாங்கண்ணி இலை பலன்:இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3.வில்வம் இலை பலன்இன்பம், ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4.அறுகம்புல் பலன்:அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
5.இலந்தை இலை பலன்:கல்வியில் மேன்மையை அடையலாம்.
6.ஊமத்தை இலை பலன்பெருந்தன்மை கைவரப்பெறும்.
7.வன்னி இலை பலன்பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8.நாயுருவி பலன்முகப் பொலிவும், அழகும் கூடும்.
9.கண்டங்கத்தரி பலன்வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10.அரளி இலை பலன்எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11.எருக்கம் இலை பலன்கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12.மருதம் இலை பலன்மகப்பேறு கிட்டும்.
13.விஷ்ணுகிராந்தி இலை பலன்நுண்ணிவு கைவரப்பெறும்.
14.மாதுளை இலை பலன்பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15.தேவதாரு இலை பலன்எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
 16.மருக்கொழுந்து இலை பலன்இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17.அரசம் இலை பலன்உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18.ஜாதிமல்லி இலை பலன்சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.
19.தாழம் இலை பலன்செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20.அகத்தி இலை பலன்கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21.தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்.

21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது.
Share on Google Plus

About Unknown

Myself Suresh Babu S, working as Placement Executive. I am interested in Technology oriented updates. This is my second blog. You can see my first blog @ http://www.enter4source.in
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment